Mon. Oct 6th, 2025



தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வழக்கில், கணவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேல மெஞ்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, தனது மனைவி கலாவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரமடைந்து, கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு உள்ளது. கலா கூச்சலிட்டதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தடுக்க, ஏழுமலை அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்த வழக்கு தென்காசி மாவட்ட உரிமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்த நீதிபதி கிறிஸ்டல் பபிதா, குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, ஏழுமலைக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

— அமல்ராஜ்,
தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்

By TN NEWS