Sun. Oct 5th, 2025

.

தென்காசி, செப்டம்பர் 11

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பு செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். சாம்பவர் வடகரை பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் விமலா ஸ்டெல்லா, உதவி செயற்பொறியாளர்கள் வனஜா, ஜெயராமன், எடிசன், வி.கே. புதூர் உதவி பொறியாளர் பிரேம் ஆனந்த், இளைஞரணி அமைப்பாளர் வெற்றிவேல் பாலகன், கவுன்சிலர்கள் ரேவதி, அமுதா, உமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் பொதுமக்களிடம் இருந்து மகளிர் உரிமைத்தொகை, வீட்டு மனைப் பட்டா, பெயர் மாற்றம், சொத்து தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.

திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை பதிவு செய்தனர்.

அமல்ராஜ், தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்

 

By TN NEWS