Fri. Nov 21st, 2025

சுரண்டையில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் – பொதுமக்கள் கவலை

சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டையில் காமராஜர் கலைக்கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சுரண்டை புது மார்கெட் மெயின் ரோட்டில் தினசரி மாணவர்கள் இவ்வாறு ஆபத்தான முறையில் கூட்டமாகப் பயணம் செய்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். அந்தச் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் கூட இந்த ஆபத்தான பயண காட்சிகள் பதிவாகியுள்ளன எனத் தெரிகிறது.

“இவ்வாறு தொடர்ந்தால் எப்போதும் பெரிய விபத்து நிகழ வாய்ப்பு உள்ளது. காவல்துறை, கல்லூரி நிர்வாகம், பெற்றோர் ஆகியோர் உடனடியாக தலையிட்டு மாணவர்களுக்கு எச்சரிக்கை வழங்க வேண்டும்” என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை எப்போது நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

📰 அமல்ராஜ் – தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்

By TN NEWS