Mon. Oct 6th, 2025

குடியாத்தம், செப்டம்பர் 9:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செருவங்கி பகுதியில் கஞ்சா விற்பதாக குடியாத்தம் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

டிஎஸ்பி சுரேஷ் உத்தரவு பிரகாரம், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் செருவங்கி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகம் அருகே நின்றிருந்த ஒரு வாலிபர் சந்தேகத்தின் பேரில் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

விசாரணையில், அவர் நெல்லூர் பேட்டை தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (22) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, நகர போலீசார் அவரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

✍️ கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

By TN NEWS