Sun. Oct 5th, 2025



தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, வெங்கட்ராமன் பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். ஆனால், பணி மூப்பில் அவரைவிட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் இருப்பதால் எதிர்ப்பு எழுந்தது.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், புதிய டி.ஜி.பி நியமனம் செய்யும் முன்பாகவே மூன்று மாதங்களுக்கு முன்னர் யு.பி.எஸ்.சி-க்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்ற நடைமுறையை தமிழக அரசு பின்பற்றவில்லை என்று கூறப்பட்டது.

இன்று (08.09.2025) வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம், டி.ஜி.பி நியமன செயல்முறையை யு.பி.எஸ்.சி விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்றும், அதன் பரிந்துரையின் பேரில் வழக்கமான முறையில் நியமனம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

📍 ஜெ.அமல்ராஜ்,
மாவட்ட தலைமை நிருபர்,
தென்காசி மாவட்டம்

By TN NEWS