Sun. Oct 5th, 2025



திண்டுக்கல் ராஜலட்சுமி நகர் சித்தாரா மஹால் அருகே விபத்து

திண்டுக்கல் மாநகராட்சியின் புதிய பாதாள சாக்கடை பணிகள் பாதுகாப்பு வசதி இன்றி நடைபெறுவதால், நடுரோட்டில் தோண்டப்பட்ட பள்ளம் பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜலட்சுமி நகர் சித்தாரா மஹால் அருகே தார் சாலையில் எந்த அறிவிப்பு பலகையோ, பாதுகாப்பு ஏற்பாடுகளோ, மின்விளக்குகளோ இல்லாமல் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.

அந்த இடத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல், அதே பகுதியைச் சேர்ந்த சௌந்தரபாண்டி (வயது 21) என்பவர் மோட்டார் சைக்கிளில் பள்ளத்தில் விழுந்தார். இதில் அவர் பலத்த காயமடைந்து, தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து, மாநகராட்சி ஆணையாளர், உதவி பொறியாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்டோரின் அலட்சியத்தைக் குற்றம்சாட்டி நகர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமர் – திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு டுடே செய்திகள்.

By TN NEWS