Sun. Oct 5th, 2025



குடியாத்தம், செப்டம்பர் 5:
குடியாத்தம் வட்டம், தாழையாத்தம் கிராமம் பொன்னியம்மன் கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த தேவி (36) க/பெ. தண்டபாணி என்பவர் இன்று (05.09.2025) மாலை 6.00 மணியளவில் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

உடனடியாக தகவலறிந்து குடியாத்தம் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், இறந்த தேவி அவர்கள் கடந்த ஒரு மாதமாக அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்ததும், இவர் இந்து அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கணவர் தண்டபாணியுடன் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாகவும் உறுதி செய்யப்பட்டது.

இவருக்கு குரு (18), கார்த்தி (17), தனுஷ் (15) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். அவர்கள் தற்போது தேவியின் தாய் வீட்டில், காக்காத்தோப்பு பகுதியில் பாட்டியுடன் வசித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS