உசிலம்பட்டி | 05 செப்டம்பர் 2025
உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் விடுதலைப் போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழருமான வ.உ. சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சரவணகுமார் மற்றும் மகேந்திரன் தலைமையில், கட்சி நிர்வாகிகள் வ.உ.சி. திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் “அய்யா வ.உ.சி. புகழ் ஓங்குக!” என முழக்கமிட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
வீர சேகர் – உசிலம்பட்டி செய்தியாளர்.