திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம் பூதக்குடி ஊராட்சியைச் சேர்ந்த முத்தரையர் சமூக மக்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Act) பயன்படுத்தப்பட்ட வழக்கை திரும்பப் பெறக் கோரி, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் அளவில் பொதுமக்கள் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள், “பொய்யான குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு எங்கள் சமூகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்த வழக்கை உடனடியாக வாபஸ் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
மேலும், “சமூக ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் விதமாக பொய்யான வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதனால் எங்கள் குடும்பங்கள் அச்சத்தில் வாழ்கின்றன. தமிழக அரசு மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை உடனடியாக தலையிட்டு நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோஷம் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் பெண்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பெருமளவில் பங்கேற்றனர். மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு மனுவும் அளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம்
ராமர் – ரிப்போர்ட்டர்.