Sun. Oct 5th, 2025



செப்டம்பர்  1

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய்த்துறை அலுவலர்களின் 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி வரும்
3 9 2025 − 4 9 2025
ஆகிய இரண்டு தினங்களுக்கு வேலூர் மாவட்டத்தில் 14-000 வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்கும் 48 மணி நேர தொடரி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது

வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்பிட அரசாணை வெளியிட வேண்டும் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்ட 564 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்

2 உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறுகிய கால அவகாசத்தில் அதிகமான முகாம்கள் நடத்துவதை குறைத்து வாரத்திற்கு இரண்டு முகாம்கள் மட்டுமே நடத்திடவும் மேலும் திட்டப் பணிகளை மேற்கொள்ள உரிய கால அவகாசம் கூடுதலான தன்னார்வலர்கள் நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை வழங்கிட வேண்டும்

3 அனைத்து மாவட்டங்களிலும்ஞ பேரிடர் மேலாண்மை பணிக்கான சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரில் பேரிடர் மேலாண்மை பிரிவில் 31 3 2023 முதல் அழைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும்

4 சான்றிதழ் வழங்கும் பணிகள் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட அரசு சிறப்பு திட்டம் பணிகளை மேற்கொள்ள அனைத்து வட்டங்களிலும் புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து  நிலை அலுவலருக்கும் மேற்படுத்தப்பட்ட ஊதியம் & தனி ஊதியம் வழங்கிட வேண்டும்


அரசு துறையில் கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது  அதை ரத்து செய்து மீண்டும் 25% ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும்

இளநிலை உதவியாளர் தட்டச்சர் ஆகியோரிடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்திட மனித வள  மேலாண்மை துறை றை மூலம் உரிய அரசாணை உடனே வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

By TN NEWS