📌குமரி மாவட்டம் அண்ணா விளையாட்டு அரங்கில் குடிநீர் தட்டுப்பாடு…!
நாகர்கோவில்:
அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டிகளில் இன்று மாலை நூற்றுக்கணக்கான மாணவர்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
🛑பழுதடைந்த RO இயந்திரம் – அதிகாரிகளின் அலட்சியம்:
அரங்கில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் RO இயந்திரம் இரண்டும் (500 லிட்டர் + 250 லிட்டர் கொள்ளளவு) இருந்தாலும், 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட RO இயந்திரம் பல மாதங்களாக செயலிழந்து கிடக்கிறது. இதனை சரிசெய்ய எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
மற்றொரு இயந்திரத்திலிருந்து குழாய் மூலம் கேன்களில் தண்ணீர் எடுத்து வழங்கப்பட்டது. ஆனால் தேவைக்கு போதாத நிலை உருவானது.
🟥விலை கொடுத்து கேன் தண்ணீர் – மாணவர்களின் கேள்வி…?
இதே சமயம், வெளியில் இருந்து 20 லிட்டர் கேன் தண்ணீர் விலை கொடுத்து வாங்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
📌இதனால் பல கேள்விகள் எழுந்துள்ளன:
“அரங்கில் RO இயந்திரத்தில் தண்ணீர் கிடைத்தும் ஏன் கேன் தண்ணீர் வாங்க வேண்டும்?”
“அந்த செலவில் பழுதடைந்த RO இயந்திரத்தை சரி செய்திருக்கலாமே?”
📌வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகம்…?
மாநில அளவிலான போட்டி நடைபெறும் இடத்தில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை கூட பூர்த்தி செய்யப் படாதது குறித்து கவனம் பெற்றுள்ளது.
விலை கொடுத்து தண்ணீர் வாங்குவதில் ஏதேனும் சூட்சுமம் உள்ளதா? அதிகாரிகள் ஏன் பழுது சரி செய்யாமல் அலட்சியம் காட்டுகின்றனர்? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
🎈மாணவர்கள் – பெற்றோரின் எதிரொலி…?
“விளையாட்டை ஊக்குவிக்கும் போட்டி என்ற பெயரில், அடிப்படை தேவையான குடிநீர் கூட வழங்கப்படாமல் மாணவர்கள் அவதியுறுவது மிகுந்த வருத்தம் தருகிறது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தினர்.
***அரசின் விளையாட்டு துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் கவனத்திற்கு இந்த கோரிக்கையை பல முறை கவனத்திற்கு அனுப்பியுள்ளது. இருப்பினும் இன்னும் முழுமையாக நடவடிக்கைகள் எடுக்காததால் இந்த நிலை தொடர்கிறது என பொதுமக்கள் மற்றும் இளைய தலைமுறையினர் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.***
🛑*உடன் தகுந்த நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க தமிழ்நாடு டுடே வலியுறுத்துகிறது*.🛑
🗞️✍️ சேக் முகைதீன்
இணை ஆசிரியர், தமிழ்நாடு டுடே (சமூக ஊடகங்கள்)