திண்டிவனம் அன்னை தெரேசா ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா!
டிஎஸ்பி பிரகாஷ் பங்கேற்றார்:
திண்டிவனத்தில் அன்னை தெரேசா ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பில் 25வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது.
ஆவணி மாதம் 11ம் நாள் (ஆகஸ்ட் 27) புதன்கிழமை வளர்பிறை சதுர்த்தி அன்று, சங்கத் தலைவர் பாலச்சந்திரன் தலைமையில் விழா நடந்தது.
இவ்விழாவில் ஏழடிச் சிலை விநாயகர் பிரதிஷ்டை செய்து, கணபதி ஹோமம், தீப ஆராதனை, மலர் அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொழுக்கட்டை, சுண்டல், அவல், பொரிகடலை, பழங்கள், தானியங்கள் ஆகியவை படையலிட்டு வழிபாடு நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக திண்டிவனம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பிரகாஷ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் செல்வதுரை, காவலர்கள், சட்ட ஆலோசகர் ஆறுமுகம், செயலாளர் நிமலநாதன், பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
🖊️ விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர்: மதியழகன்