Tue. Oct 7th, 2025

கடையநல்லூரில் நாய் துரத்தல் – கழிவுநீர் ஓடையில் விழுந்த பெண் கால் முறிவு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சிதம்பரப்பேரி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ராதிகா (31). இவர் மகளிர் சுய உதவி குழு தலைவியாக உள்ளார்.

இன்று காலை குமராபுரம் வடக்கு விளை காலனி பகுதியில் வசூலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தெருவில் இருந்த நாய்கள் அவரை துரத்தியது. அதில் இருந்து தப்பிக்க முயன்ற ராதிகா, பைக் சறுக்கி அருகிலிருந்த கழிவுநீர் ஓடையில் விழுந்து கால் முறிவு அடைந்தார்.

அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், தென்காசி அரசு மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டார்.

கடையநல்லூரில் தொடர்ந்து நாய்கள் பொதுமக்களை, குழந்தைகளை துரத்தி கடிப்பது அன்றாட பிரச்சினையாக உள்ளது. “நீதிமன்ற அறிவுரைப்படி மாவட்ட நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமல்ராஜ், தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்


By TN NEWS