Mon. Aug 25th, 2025

கோவை மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் திருட்டு குற்றவாளி பிடிபட்டார்!

கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் முன்னெடுப்பில் “SMART KAKKI’S” திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் காவலர்கள் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி இன்று (21.08.2025) அதிகாலை அன்னூர் காவல் நிலைய வரம்பில், கரியாம்பாளையம் அருகே வாகன சோதனை நடத்தப்பட்டபோது, சந்தேகத்திற்கிடமாக சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்திச் சோதனை செய்தனர். விசாரணையில் அவர் அளித்த பதில்கள் முரண்பட்டதால் தீவிரமாக விசாரித்ததில், அவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் (36) எனவும், கோவை மாநகர ஆவாரம்பாளையத்தில் திருடப்பட்ட வாகன வழக்கில் தொடர்புடையவர் எனவும் தெரியவந்தது. மேலும் அவர்மீது பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து, அவரை கோவை மாநகர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு இரவு ரோந்து பணியில் திறம்பட செயல்பட்டு குற்றவாளியை பிடித்த PC 968 தாமோதரன் மற்றும் HG 140 கோவிந்தராஜ் ஆகியோரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.

📍 திருப்பூர் – சரவணக்குமார்

By TN NEWS