Sun. Oct 5th, 2025



திண்டுக்கல் –
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அருள்கவி உணவகத்தில், உணவில் பூச்சி இருந்ததாக புகார் கிடைத்ததைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜோதிமணி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனையில், உணவகம் சுகாதார விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. குறிப்பாக, ஊழியர்கள் தலைக்கவசம், கை கையுறை, மருத்துவ உடல் பரிசோதனை சான்றிதழ் போன்றவை இல்லாமல் பணியாற்றி வந்தது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உணவக உரிமையாளருக்கு ரூ.3,000 அபராதம் விதித்து, தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென நோட்டீஸ் வழங்கினர்.

செய்தியாளர்: ராமர், திருச்சி மாவட்டம்


 

By TN NEWS