வேலூர், ஆகஸ்ட் 17:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.
ஊர்வல தொடக்கம்:
இன்று காலை காளியம்மன் திருக்கோயிலில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் எஸ். சதீஷ் தேசியக் கொடியை அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கிருஷ்ணர் உருவம் அனைவரையும் கவர்ந்தது.
தலைமை & முன்னிலை:
விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட துணைத் தலைவர் ஜி.கே. ரவி தலைமை தாங்கினார்.
பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் வி. கார்த்தி வரவேற்புரை ஆற்றினார்.
நகரத் தலைவர் சி.ஆர். சிதம்பரம், ஒன்றிய தலைவர் ஜே. வினோத், பஜ்ரங்தள் நகரத் தலைவர் எஸ். ராகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்கள்:
மாநில இன செயலாளர் எஸ். ராஜா
மாநில அமைப்பாளர் கே.எஸ். தூய மணி
மாநில விசேஷ மக்கள் தொடர்பாளர் பி. பிரபாகரன்
மாவட்ட செயலாளர் எம். சத்தியமூர்த்தி
அர்ச்சகர் எம். திருமாவளவன்
ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
ஊர்வல சிறப்புகள்:
சிலம்பாட்டம், கோலாட்டம், மேலதாளம் என உற்சாகமாக ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. இறுதியில் பிச்சனூர் பேட்டையில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் நிறைவடைந்தது.
நிறைவு:
ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட இணை அமைப்பாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி நன்றியுரையாற்றினார்.
கே.பி. ராஜேந்திரன்,
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்