Thu. Aug 21st, 2025





வேலூர், ஆகஸ்ட் 17:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரும் பேரணி நடைபெற்றது.

கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட தலைவர் சுதாகர் தலைமையில் “ஆவணப் படுகொலைகளை எதிர்த்து – மதச்சார்பின்மை காப்போம்” என்ற கோரிக்கையுடன் இந்த பேரணி நடந்தது.

நிகழ்ச்சி தொடக்கம்:

காமராஜர் பாலம் அருகே தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு முதலில் மாலை அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து, மேல தாளங்கள் முழங்க ஊர்வலம் தொடங்கியது.

பின்னர் சமுத்திரம் நகரில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாவட்ட தலைவர் சுதாகர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.

பங்கேற்பு:

இந்த பேரணியில்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள்,

மாவட்ட நிர்வாகிகள்,

நகர ஒன்றிய நிர்வாகிகள்,

500-க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள்,

பொதுமக்கள் என பலர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.


கோரிக்கை:

“தமிழகத்தில் தினந்தோறும் அரங்கேறி வரும் ஆவணப் படுகொலைகளை தடுக்க, அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும். மதச்சார்பின்மையை காக்க வேண்டியது காலத்தின் அவசியம்” என்று பேரணியில் வலியுறுத்தப்பட்டது.


கே.வி. ராஜேந்திரன்,
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்

 

By TN NEWS