நெல்லை மாவட்டம், ராமையன்பட்டியில் மானூர் மேற்கு ஒன்றிய மறுமலர்ச்சி திமுக சார்பில் 79வது சுதந்திர தின விழா கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழா எல்.ஐ.சி. திரு டென்சிங் அவர்கள் தலைமையிலும், வேப்பங்குளம் திரு ஜான் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவரான கே.ஏ. மஸ்தான் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினர்.
விழாவில் மாநகராட்சி ஓய்வு பெற்ற ஓட்டுநர் திரு கனி ( சின்னப்ப ராஜ்), சத்யா மொபைல் பொன்ராஜ், நம்பி ட்ராவல்ஸ் திரு ஆறுமுகம் யாதவ் (ஊர் தலைவர்), ஆர்கே ஆட்டோ ஓட்டுநர் திரு பிலிப்ஸ், ஐஸ்வர்யா மஹால் செக்யூரிட்டி திரு ஊர் காவலன், திரு துரைராஜ், திரு சண்முகவேல், தச்சநல்லூர் தேயிலை வியாபாரி திரு கோபாலகிருஷ்ணன், டூ வீலர் மெக்கானிக் திரு மாரியப்பன், அயன் கடை திரு மாரியப்பன், சுடரொளி மகளிர் குழு ஊக்குநர் திருமதி பொன் கற்பகவல்லி, ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் திருமதி சபியா பானு மஸ்தான் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழா நிறைவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
“பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாப்போம்; சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த உத்தமர்களை இந்நாளில் நினைவு கூறுவோம்” என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
வந்தே மாதரம்! ஜெய்ஹிந்த்!
சேக் முகைதீன்
இணை ஆசிரியர்