திருப்பூர் மாவட்ட காவல்துறை
பத்திரிக்கை குறிப்பு : 07.03.2024 தமிழ்நாட்டில் சமீபகாலமாக வெளி மாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்ததுடனும் சமூக விரோதிகள் சிலர் சமூக வலைதளங்களில் இதுபோன்ற காணொளிகளையும், செய்திகளையும் பரப்பி வருகின்றனர். போலியான செய்திகளை கேட்டும், காணொளிகளை பார்த்தும் பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ, பதற்றமடையவோ வேண்டாம், இதுசம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் திருப்பூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை உதவி எண் 9498181208, மாவட்ட தனிப்பிரிவு அலுவலக உதவி எண்: 9498101320 அல்லது 100 க்கு அழைக்கலாம். எனவே சமூக வலைதளங்களில் பகிரப்படும் தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம், வதந்திகளை மற்றவர்களுக்கு பகிரவோ, பரப்பவோ வேண்டாம். இது போன்று தவறான / பொய்யான தாகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்பட்டுகிறது. காவல் கண்காணிப்பாளர், திருப்பூர் மாவட்டம்.
திருப்பூர் மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்