
வேலூர் மெயின் பஜாரில் நகை கடை நடத்தி வரும், ஆனந்த் ஜூவல்லரி உரிமையாளரை சில அடையாளம் தெரியாத ரவுடிகள் கும்பல், கடையின் ஷட்டரை மூடி விட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்த உடன், வேலூர் நகை வியாபார சங்கத்தினர் மற்றும், வேலூர் மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்கம் நிர்வாகிகள் உடன் சென்று காவல்துறையிடம் முறையிட்டு, சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்து,கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நகை அடகு வியாபாரிகள் சங்கம் வண்மையாக கண்டிக்கின்றது. இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்க சங்கத்தின் கூட்டத்தில் முடிவு எடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது.