திருப்பூர் மாவட்ட காவல்துறை – பத்திரிக்கை செய்தி
போக்சோ வழக்கில் தொடர்புடைய நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்வக்குமாரக்வுண்டன்வலசு பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்த 17 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த வழக்கில் சிறுமி கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி கடந்த 05.01.2024 அன்று காங்கயம் அனைத்து மகளிர் காவல்நிலைய குற்ற எண்: 02/2024 ச/பி 5(l),5(m),5(j), (ii) r/w 6 Of POCSO Act-2012-ன் கீழ் வழக்கு பதிவு செய்து எதிரியான ஹரிபிரசாத்-33, த/பெ பெரியசாமி, சந்தலிங்கபுரம், ஆலாம்பாளையம், முத்தூர், வெள்ளகோவில் என்பவரை காவல் ஆய்வாளர் திருமதி.விஜயலட்சுமி அவர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேற்கண்ட எதிரியை தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்ததைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 01.03.2024 ம் தேதி தடுப்புக் காவலில் வைக்க ஆணை பிறப்பித்தார். அதன்படி இன்று 02.03.2024 காங்கயம் அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் கோவை மத்திய சிறையில் இருக்கும் எதிரியிடம் தடுப்புக்காவல் ஆணையை சார்வு செய்து தடுப்புக்காவலில் அடைத்தனர் .
திருப்பூர் மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்