Mon. Jul 21st, 2025

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் நல சங்கம் கடும் கண்டனம்

*🛑 விகடன் இணையதளம் முடக்கம்..*

*தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கடும் கண்டனம்*

மாண்புமிகு இந்திய பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் மற்றும் அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய இந்தியர்களை விலங்கிட்டு திருப்பி அனுப்பியதை குறிக்கும் வகையில் கார்ட்டூன் வெளியிட்டு இருந்த விகடன் இணையதளத்தை மத்திய அரசு முடக்கியதை தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

அமெரிக்காவின் இந்தியர் அவமதிப்பை கண்டுக் கொள்ளாத இந்திய அரசின் செயலை சுட்டிக்காட்டும் வகையில் கார்ட்டூன் படம் வெளியிட்ட விகடன் இணைய தளத்தை முடக்கியது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது.

விகடன் நிறுவனத்தின் இணைய தளத்தை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
தலைமையகம்
9840035480

மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *