திருப்பூர் டிச 11,
*வெங்கமேடு மின்வாரிய அலுவலக முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சிறப்புக்குழு.*
*குன்னத்தூர் உபகோட்ட மின்வாரிய அலுவலகத்திலுள்ள பெண் ஊழியர் சக பணியாளர்கள், ஊழியர்களை தொந்தரவு செய்து வருவது குறித்து தொடர் புகார் விவகாரம் தனி விசாரணை நடத்தப்படும் என தகவல்*
*கோவை மத்திய அலுவலகத்திலிருந்து வெங்கமேடு முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம்.*
*பழிவாங்கும் நோக்கில் தெக்கலூர் கிழக்கு மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள வீட்டு இணைப்பை தற்காலிக மின்சார இணைப்பாக மாற்றிய விவகாரம் உடனடியாக மீண்டும் வீட்டு இணைப்பாக மாற்றப்படும் என குறைதீர்ப்பு அலுவலர் தகவல்.*
திருப்பூர் மாவட்டம் அவினாசி கோட்ட மின்சார வாரியத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான மாதாந்திர குறை தீர்ப்பு கூட்டம் அவினாசியிலுள்ள மங்கலம் சாலையில் இருக்கிற அவினாசி கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பாா்வை பொறியாளர் (பொறுப்பு) விஜயேஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் கோட்ட செயற்பொறியாளர் பரஞ்சோதி அவர்கள் , உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர், அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச கூட்டமைப்பு இணை பொதுச் செயலாளரும் சமூக ஆர்வலருமான ஈ.பி.அ.சரவணன், மற்றும் பொது மக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அவிநாசியில் நடைபெற்ற மின்நுகர்வோர் கூட்டத்தில் ஈ.பி.அ.சரவணன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது..
1. திருப்பூர் மின்பகிர்மான வட்டம் அவிநாசி கோட்டத்திலுள்ள தெக்கலூர் கிழக்கு மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் ஏற்கெனவே ஒரு வீடுக்கு இணையதளம் வாயிலாக வீட்டு மின்சார இணைப்பு கடந்த 22-11-2024 ம் தேதி உரிய வழிமுறையாக விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய பிறகும்கூட முறையாக எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை இது தொடர்பாக போர்க்கால அடிப்படையில் விரைவாக விசாரணை நடத்தி ஏழை எளிய நடுத்தர பாமர வர்த்தகத்தை இது எளியாமையானவர்களின் வாழ்க்கை கருத்தில் கொண்டு TNERC விதிக்கு முரணாக சட்டவிரோதமாக செயல்பட்டு ஏழை எளிய நடுத்தர பாமர மக்கள் குடியிருக்கும் சிறிய வீட்டுக்கு விண்ணப்பித்த 100 யூனிட் இலவச வீட்டு இணைப்பை ரத்து செய்து தவறான தகவல் அளித்து அரசிற்கு தேவையில்லாத வீணான அவப்பெயரை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்ற தெக்கலூர் கிழக்கு அலுவலக உதவி மின் பொறியாளர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொண்டு இனிவருகின்ற காலங்களில் இது போன்ற விரும்ப தகாத செயல்கள் நடைபெறாமல் இருக்கவும் மேற்படி விண்ணப்பித்தை உடனடியாக புதுப்பித்து வீட்டு இணைப்பை விரைவாக வழங்க வேண்டும்.
2. திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள வெங்கமேடு மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற முறைகேடுகளை மூடி மறைக்க முயற்சித்து வருகின்றது தொடர்பாக உடனடியாக உரிய சட்டரீதியாக கடுமையான எடுக்க வேண்டுமென தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் அளித்திருந்த நிலையிலும்கூட எவ்வித முறையான உரிய நடவடிக்கை எடுக்கமால் காலம் கடத்தி தொடர்ச்சியாக 12 புகார் மனுக்களுக்கும் உண்மையை மூடி மறைத்து பொய்யான போலியான தவறான மழுப்பலான தகவல்களை வழங்கிய தொடர்பாக சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கமால் காலம் கடத்தி வருகின்றதால் உடனடியாக இது தொடர்பாக விசாரிக்க தனியாக சிறப்புக்குழு அமைத்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.
3. திருப்பூர் மின்பகிர்மான வட்டம், அவிநாசி கோட்டத்திலுள்ள குன்னத்தூர் உபகோட்ட மின்வாரிய அலுவலகத்திலுள்ள சீ ஐ பெண்மணி ஊழியர்களை மிரட்டியும் மரியாதை இல்லாமல் பேசியும் பைல்களை கிடப்பில் போடுவதாக சக அலுவலர்கள், ஊழியர்கள் கண்ணீர் மல்க வேதனையடைய செய்து அலுவலக பணிகளை முறையாக செய்யாமல் அலட்சியமாக இருந்து அரசியல் கட்சியினர்களை வைத்து கட்ட பஞ்சாயத்து செய்து வருகின்றது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாருக்கு.பொய்யான போலியான தவறான தகவல்களை அளித்து குன்னத்தூர் உபகோட்ட மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்று வருகின்ற குளறுபடிகளை முற்றிலுமாக மூடி மறைக்க முயற்சித்து வருகின்றது தொடர்பாக உடனடியாக சிறப்புக்குழு விசாரணைக்குழு அமைத்து முழுமையாக விசாரித்து சட்டரீதியாக கடுமையான எடுக்க வேண்டும்.
4. திருப்பூர் ஆர் கே நகர் மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட போயம்பாளையம் பகுதியிலுள்ள அரசுக்குச் சொந்தமான சுமாா் ரூ 10 கோடி மதிப்புள்ள நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தொடர்ச்சியாக 23 முறைகள் புகார்கள் அளிக்கப்பட்ட பிறகும்கூட எவ்வித முறையான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றதால் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளது இந்த இடத்திலுள்ள தனிநபரின் பெயரில் சட்டவிரோதமாக பெயர் மாற்றப்பட்டுள்ளமின் இணைப்பை துண்டிக்க மின்வாரியத்திற்கு வருவாய் துறை நோட்டீஸ் வழங்கிய பிறகும்கூட எவ்வித முறையான நடவடிக்கை எடுக்காமல் எதையோ எதிர்த்து நடைபெற்ற குளறுபடிகளை முற்றிலுமாக மூடி மறைக்க முயற்சித்து வருகின்றது தொடர்பாக உடனடியாக சிறப்புக்குழு விசாரணைக்குழு அமைத்து முழுமையாக விசாரித்து சட்டரீதியாக கடுமையான எடுக்க வேண்டும்.
5. திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள ஆர் கே நகர் மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட போயம்பாளையம் கிழக்கு பகுதியில் எவ்வித முறையான அனுமதியின்றி அவசர அவசரமாக சட்டவிரோதமாக பொது வழி தடத்தில் தனியார் தேவைக்காக அமைக்கப்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மரை உடனடியாக அகற்ற வேண்டும்.
6. வெங்கமேடு மின் வாரிய அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற முறைகேடுகள் மோசடிகளை முற்றிலுமாக மூடி மறைக்க சதி திட்டம் தீட்டி அரசிற்கு எதிராக செயல்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
7. புதிதாக உருவாக்கப்பட்டு 2.ஆண்டுகளாக கிடப்பிலுள்ள ஊத்துக்குளி மின் கோட்டம் செயலற்று உள்ளதால் இரு மாவட்ட எல்லை பிரச்சனைகள் காரணமாக பெருந்துறை, ஈரோடு, அவினாசி திருப்பூர் என மாறி மின் இணைப்பிற்கு விவசாயிகள், பொதுமக்கள் அலைய வேண்டிய அவல ஏற்பட்டுள்ளதால் உடனடியாக ஊத்துக்குளி மின் கோட்டத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈ.பி.அ.சரவணன் பேசினார்.