திருப்பூர் ஜூலை 10,,
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் இடமாற்றம்.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு சேலத்துக்கு மாற்றப்பட்டு, சென்னையில் பணிபுரிந்த ஐ.ஜி., லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, சேலம் மாநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக, சென்னை ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி.,யாக உள்ள லட்சுமி, திருப்பூர் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். விரைவில், திருப்பூரில் பொறுப்பேற்க உள்ளார்.
புதிதாக திருப்பூர் போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்க உள்ள ஐ.ஜி. லட்சுமி ஐ பி எஸ் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.
திருப்பூரில் பொறுப்பேற்க உள்ள புதிய கமிஷனர் லட்சுமி, 1997ம் ஆண்டு குரூப் – 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி.யாக தனது பணியை துவக்கினார். அதன்பின், ஐ.பி.எஸ்., அதிகாரியாக பதவி உயர்வு பெற்று, சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனர், தி.நகர். மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், கோவையில் துணை கமிஷனராக பணிபுரிந்தவர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறையில் சிறப்பாக செயல்பட்டார். நேர்மையான துணிச்சல் மிக்க பெண் ஐ.பி.எஸ். ஆன லட்சுமி பல்வேறு அதிரடிகளுக்கு பெயர் போனவர் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட தலைமை நி