
*திருப்பூர் மாவட்டத்தில் – மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் தலைமையில் நடந்த – பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்*
திருப்பூர் மாவட்டத்தில், *மாவட்ட காவல் அலுவலகத்தில்* வாரந்தோறும் *புதன்கிழமையன்று “மக்கள் குறைதீர்ப்பு முகாம்”* நடத்தப்பட்டு பொதுமக்களின் புகார்மனுக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு, துரிதமாக தீர்வு காணப்பட்டு வருகிறது.
அவ்வகையில், இன்று 26.06.24 -ம் தேதி திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடத்தப்பட்ட மக்கள் குறைதீர்ப்பு முகாமில், மேற்கு மண்டல *காவல்துறை தலைவர் திருமதி.K.பவானீஸ்வரி இ.கா.ப., அவர்கள்* கலந்து கொண்டார்.இம்முகாமில் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் வரப்பெற்ற *பொதுமக்களின் 15 புகார்மனுக்கள்* சம்பந்தமாக, காவல் நிலைய அதிகாரிகள் மேற்படி மனுதாரர்கள் & எதிர்மனுதாரர்களை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் & காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்பாக ஆஜர்படுத்தி, உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவற்றிற்கு தீர்வுகளும் காணப்பட்டது.
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்