
திருப்பூர் ஜூன் 12,,
பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் திடீர் விஜிலென்ஸ் ரெய்டு மின்வாரிய பொறியாளர் அதிரடியாக கைது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியிலுள்ள அண்ணா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இன்று மாலை லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் சசிலேகா தலைமையில் 6 பேர் கொண்ட குழு ரெய்டு நடத்தினர்.
இந்த பகுதியிலுள்ள அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் பைஜ்அகமது என்பவரின் வீட்டில் மின்சார இணைப்பு பெறுவதற்கு 5 ஆயிரம் ரூபாய் உதவி மின் பொறியாளருக்கு லஞ்சமாக கொடுக்கும் போது ரசாயனம் தடவி நோட்டுக்களை அலுவலகத்திற்கு உள்ளேயே கொடுத்த போது கையும் களவுமாக பல்லடம் நகர உதவி மின் பொறியாளர் சுரேஷ்பாபு சிக்கினார்.
தற்போது அவரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் சசிலேகா தலைமையிலான ஆறு பேர் கொண்ட போலீசார் அலுவலகத்திற்கு உள்ளே வைத்து மேலும் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்