திருப்பூர் மாவட்ட தலைமை நிருபர்சரவணகுமார்
திருப்பூர் மாவட்டம்- காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய கொலை வழக்கின் இரு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனைதிருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள வாவிபாளையத்தில் வசித்து வந்த சம்பத் குமார்(40) என்பவரை கடந்த 30.11.22-ம் தேதி முதல் காணவில்லையென 04.12.24-ம் தேதி சுப்ரமணியம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய குற்ற எண் 378/2022 U/s. Man Missing இல் வழக்கு பதியப்பட்டு விசாரித்ததில், காணாமல் போன சம்பத் குமாரை எதிரிகளான சிவசுப்ரமணியம்(44) த/பெ. வெங்கடாசலம் மற்றும் அபிமன்யு(49) த/பெ.கந்தசாமி ஆகியோர் குடிபோதையில் ஏற்பட்ட தகராறினால் அடித்துக் கொலை செய்துவிட்டு சம்பவத்தை மறைப்பதற்காக சடலத்தை PAP வாய்க்காலில் வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. அதனையடுத்து எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு இந்த வழக்கின் விசாரணை திருப்பூர் மாவட்ட PDJ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மேற்கண்ட வழக்கில் கொலை குற்றத்திற்காக குற்றவாளிகளான இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 2000 ரூபாய் அபராதமும், மேலும் சம்பவத்தை மறைத்த குற்றத்திற்காக குற்றவாளிகள் இருவருக்கும் 7 வருடம் சிறை தண்டணை மற்றும் தலா 2000 ரூபாய் அபராதமும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.