Mon. Jul 21st, 2025

சட்டவிரோதமாக  மது பாட்டில் விற்றவர் கைது

🚨🚨 அவிநாசிபாளையத்தில் வெளி மாநில மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது🚨🚨 திருப்பூர் மாவட்டம்,அவிநாசிபாளையம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக வெளி மாநில மதுபானம் விற்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் அங்கு விரைந்து சென்ற அவிநாசி மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் அசோக்குமார் & காவலர்கள் அங்கிருந்த ஒரு மளிகைகடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கர்நாடக மாநில மதுபானங்கள் மொத்தம் 51 பாட்டில்களை கைப்பற்றி, அக்கடைக்காரரான ராஜ்குமார்(39),பால்குளம், தூத்துக்குடி என்பவரை கைது செய்து 🔗வழக்கு பதிவு செய்து,பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *