Mon. Jul 21st, 2025

வெள்ளக்கோவிலில் பூட்டிய வீட்டில் திருட்டு

🔥⛔ வெள்ளகோவிலில் இரவில் 🏠 வீட்டின் 🔓பூட்டை உடைத்து திருடிய நபர் கைது – சிறையில் அடைப்பு⛔🔥
திருப்பூர் மாவட்டம்,வெள்ளகோவில் காவல் நிலைய பகுதியான D R தெருவில் கடந்த 21.5.24 ம் தேதி இரவில் பெரியசாமி என்பவரின் 🏠 வீட்டின் 🔓பூட்டை உடைத்து, மொத்தம் 🪙சுமார் – 3 புவுன் தங்க நகைகள் & 💷ரூ. 13000/-பணத்தையும் யாரோ திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து வழக்கு பதியப்பட்ட நிலையில்,திருப்பூர் மாவட்ட SP அவர்களின் உத்தரவுப்படி, காங்கேயம் DSP அவர்களின் மேற்பார்வையில், 👨🏻‍✈️ SI ஜெயகுமார், HC கோபிநாத் & காவலர்கள் அப்பகுதி CCTV 🎥 கேமரா பதிவுகளை ஆய்வு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டது பவானியைச் சேர்ந்த தமிழரசு(24), த/பெ.ரவிகுமார் என்றும், இவரின் மீது ஈரோடு மாவட்ட காவல் நிலையங்களில் ஏற்கனவே 3 திருட்டு வழக்குகள் உள்ளதையும் கண்டறிந்ததுடன், உடனடியாக அவரை கைது செய்து🔗🔗 திருடப்பட்ட 💶பணத்தையும் 🪙நகைகளையும் மீட்டு, திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, பிறகு அவரை ⚖️ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.💥🔥💥

மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *