Mon. Jul 21st, 2025

குற்றச் செயல்களை தடுத்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

*திருப்பூர் மாவட்ட காவல்துறை-பத்திரிக்கை செய்தி-28.05.24*

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறை அலுவலர்களில் இம்மாதத்தில் இரவு ரோந்துகளின்போது மிகச்சிறப்பாக பணியாற்றி குற்ற செயல்களை தடுத்த காவலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்:
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.அபிஷேக்குப்தா.இ.கா.ப.,* அவர்களின் உத்தரவுப்படி மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணியில் அதிகபட்ச காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு குற்றங்களைத் தடுத்து,   பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் , இம்மாதத்தில் இரவு ரோந்துகளின்போது மிகச்சிறப்பாக பணியாற்றி திருட்டுக்குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக பிடித்து, சட்டம் ஒழுங்கை சீராக பராமறிக்க பணியாற்றிய காவல் அலுவலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்  ஊக்கப்படுத்தினார். அவர்களின் பணி விபரங்கள் பின்வருமாறு:
• பல்லடம் காவல்நிலையத்தின்  வடுகபாளையம் பகுதியில் இரவு ரோந்தில் இருந்த  ஆயுதப்படை முதல்நிலைக்காவலர் ஸ்ரீதரன் மற்றும் ஊர்க்காவல்படை காவலர் அருள்ராஜ் இருவரும் அச்சமயத்தில் வயதான நபரிடம் செல்போனை வழிப்பறி செய்துவிட்டு தப்பியோட முயன்ற அசாரூதீன் என்பவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
• உடுமலை காவல்நிலையத்தின்  அந்தியூர் சோதனை சாவடியில் இரவு ரோந்தில் இருந்த  முதல்நிலைக்காவலர் முருகவேல் என்பவர் அன்றிரவு இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு வந்த இரண்டு நபர்களை பிடித்துள்ளார்.
• காங்கயம் காவல்நிலையத்தின்  படியூர் பகுதியில் இரவு ரோந்தில் இருந்த  காங்கயம் துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.பார்த்திபன் மற்றும் காவலர் சதாம்உசேன் ஆகியோர்  இரவில் வீட்டை உடைத்து திருடிய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு  எதிரிகளை இருசக்கர வாகனத்தில் வந்தபோது பிடித்துள்ளனர்
• ஊத்துக்குளி காவல்நிலையத்தின்  டவுன் பகுதியில் இரவு ரோந்தில் இருந்த  காவலர் பாலு என்பவர் அப்பகுதியிலுள்ள ஒரு ATM இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற சாஜகான்அலி என்பவரை கையும் களவுமாக பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *