
பழனி நகர் பகுதியில் 3 இடங்களில் சில மாதங்களுக்கு முன்பு இரவு நேரங்களில் ஆட்கள் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டுக்குள் புகுந்து ஆட்கள் இருக்கும்போதே திருட்டு சம்பவம் நடைபெற்றது இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் குமார் உத்தரவின் பேரில் போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர் இந்த நிலையில் கலிக்கநாயக்கன் பட்டியை சேர்ந்த தனசேகரன் என்பவரை dsp தனஜெயம் தலைமையில் ஆய்வாளர் மணிமாறன் அறிவுறுத்தலின் பேரில் சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையிலான போலீசார் கைது செய்தனர் மேலும் இவரிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனம் ,தங்க கட்டி ,செல்போன் ,வெள்ளி, செயின் ,செல்போன், உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளியை சிறையில் அடைத்தனர்
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்