Mon. Jul 21st, 2025

அலர்டா இருங்க மக்களே

🔵🟣

மார்ச் 14! ஆதார் கார்டு அப்டேட் செய்யாவிட்டால் அபராதம் அலர்டா இருங்க மக்களே!

Aadhaar Card Update Before March 14 :
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டையை மார்ச் 14ம் தேதிக்கு முன்னதாக புதுப்பிக்க வேண்டும்.

அதிலும் 10 ஆண்டுகள் பழையான ஆதார் கார்டை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். இலவசமாக அப்டேட் செய்ய மார்ச் 14 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது…
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் மார்ச் 14ஆம் தேதிக்கு முன் அப்டேட் செய்யவில்லை என்றால், கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஆதார் அட்டை எனப்படும் ஆதார் எண் அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் அதிகமாகிவிட்ட நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பத்தாண்டுகள் ஆன ஆதார் அட்டையை அப்டேட் செய்துக் கொள்ள வேண்டும்

ஆதார் கார்டில் உள்ள தனிநபர் விவரங்களில் திருத்தம் ஏதேனும் இருந்தாலும் அதை உடனடியாக செய்துவிடுங்கள். இல்லாவிட்டால் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இலவசமாக மார்ச் 14ம் தேதி வரை ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம். ஏதேனும் காரணத்தால், மார்ச் 14 வரை அப்டேட் செய்யாவிட்டால் கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டியிருக்கும்

முதலில் ஆதார் பதிவு செய்தபோது 5 வயதுக்கு குறைவாக இருந்தவர்கள் 5 வயதான பிறகு ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும். அதேபோல, 5 வயது 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 15 வயதான பிறகு பயோமெட்ரிக்ஸ் தகவல்களை ஆதாரில் சேர்க்க வேண்டும்.

15 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 வருடத்திற்கு ஒருமுறை பயோமெட்ரிக் தரவைப் புதுப்பிக்க வேண்டும். ஆதார் அட்டையில் தகவல்களை புதுப்பிக்க, uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ போர்ட்டலைப் பார்வையிடவும். புதுப்பிக்க விரும்பும் தரவுப் புலத்தைத் தேர்ந்தெடுத்து தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.

தலைமை நிருபர் சரவணகுமார் திருப்பூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *