
தேர்தல் புறக்கணிப்பு கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்..
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாக்கு உட்பட்ட கருங் கடல் ரேஷன் கடை பகுதி தெருவில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்பில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் பல வருடங்களாக பயன்படுத்தி வந்த பாதையை மதில் சுவர் அமைத்து அடைத்து உள்ளதால் அந்தப் பகுதி பொதுமக்கள் வெளியே செல்லாமல் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை இதனால் அந்தப் பகுதியில் குடியிருப்பு பகுதியில் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்…
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்