🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
திருப்பூர்-பல்லடம் நான்கு பேர் கொலை வழக்கில் – 4 எதிரிகளுக்கு தலா 4 ஆயுள் தண்டனைகள் வழங்கி
திருப்பூர் PDJ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. கடந்த செப்டம்பர் மாதம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்கள் கொலை செய்யப்பட்ட கொலைவழக்கில் எதிரிகளை கைது செய்து
திருப்பூர் மாவட்ட காவல்துறை 👨🏻✈️👨🏻✈️👨🏻✈️👨🏻✈️துரிதமாக விசாரணை
முடித்து, நீதிமன்றத்தில் 6 மாதங்களிலேயே வழக்கு சாட்சிகளை ஆஜர்படுத்தினர்.
எதிரிகள் குட்டி(எ)ராஜ்குமார்(எ)வெங்கடேஷ், சோனைமுத்தையா, செல்லமுத்து, ஐய்யப்பன் ஆகிய ஒவ்வொருவருக்கும் தலா 4 ஆயுள் ⚖️⚖️⚖️⚖️
தண்டனையும் வெங்கடேஷ்(எ)செல்வத்துக்கு இரண்டு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
⛔️ ⛔️ இது பல்லடம் பகுதியிலுள்ள குற்றம் செய்பவர்களுக்கு அச்சுறுத்தும் தீர்ப்பு. ⛔️ ⛔️
இதனால் அரசாங்கம், காவல்துறை மற்றும் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்