
C.No.34/SB/Press Note/Tiruppur DT: 04.04.2024
பத்திரிக்கை செய்தி
**பெருமாநல்லூரில் இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு ** திருப்பூர் மாவட்டம்,பெருமாநல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பொங்குபாளையம், ஸ்ரீ சக்தி கார்டன் பகுதியில் வசித்து வரும் ராஜேஷ் என்பவர் தனது Yamaha RX-135 இருசக்கர வாகனத்தை கடந்த 30.03.2024-ம் தேதி மதியம் 12 மணிக்கு தன் வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று விட்டதாகவும், மீண்டும் நேற்று 03.04.2024-ம் தேதி காலையில் வீட்டிற்கு திரும்பிவந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை என்றும், திருட்டு போன இரு சக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்ததின் பேரில் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவிநாசி உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையினரான உதவி ஆய்வாளர் சுரேந்திரன், காவலர்கள் கார்த்திகேயன், மயில்சாமி, ஆகியோர் CCTV காட்சிகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டது திருச்சி மாவட்டம், முசிறி, மலையப்பர் சாலை பகுதியைச்சேர்ந்த சஜன் @ தனுஷ்-22, என்பதை தெரிந்து, மேற்படி நபரை கைது செய்து அவரிடமிருந்து திருடுபோன இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றினர்.பிறகு மேற்படி நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்காக அவினாசி கிளைச்சிறையில் அடைத்தனர்.
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்