
C.No.33/SB/Press Note/Tiruppur DT: 03.04.2024
அவிநாசி பகுதியில் லாட்டரி விற்பனை செய்த நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைப்புதிருப்பூர் மாவட்டம், அவிநாசி உட்கோட்டம் - அவிநாசி நரியம்பள்ளி புதூர் பகுதியில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக இன்று 03.04.2024 ம் தேதி காலையில் கிடைத்த ரகசிய தகவலையடுத்து, உடனே அப்பகுதிக்கு சென்ற அவிநாசி போலீஸார் நரியம்பள்ளி பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பதற்காக வைத்திருந்த நாகராஜ்(40),த/பெ. சண்முகம், 667/3A, பாலாஜி நகர், கருமத்தம்பட்டி, கோவை. என்பவரை பிடித்து விசாரித்ததில், அவர் அரசினால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை பேருந்து மூலம் கேரள மாநிலம் சென்று அவ்வப்போது எடுத்து வந்து இப்பகுதிகளில் விற்று வந்தது தெரியவந்ததால், அவரை கைது செய்து, அவரிடமிருந்த 265 லாட்டரி சீட்டுகள், 3500/- ரூபாய் பணம், மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர், இதற்காக அவர்மீது வழக்கு பதிவு செய்து, பிறகு எதிரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலுக்காக அவிநாசி கிளை சிறையில் அடைத்தனர்.
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்