
C.No.32/SB/Press Note/Tiruppur DT: 04.02.2024
காங்கேயம் பகுதியில் சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்ற நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு:
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கணபதி நகரில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை நடப்பதாக இன்று 02.04.2024 ம் தேதி ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், காங்கேயம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி உடனடியாக அங்கு சென்ற தனிப்படை உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் சில நாட்களாக தங்கியிருந்த பர்வின்குமார்(39) த/பெ. லாலா ராம்,ஷாலூர், ராஜஸ்தான் என்ற நபரைப் பிடித்து விசாரித்ததில், அவர் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்று வந்ததை ஒப்புக்கொண்டதால், அவரை போலீஸார் கைது செய்ததுடன், அவரிடமிருந்த மொத்தம் சுமார் 33 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களான – HANS, COOLIP, SWAGAT போன்றவற்றை கைப்பற்றி மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்தனர். பிறகு விசாரணை முடித்து அவரை காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலுக்காக திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்