
பல்லடத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 03 பேர் கைதுதிருப்பூர் மாவட்டம், பல்லடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக இன்று 03.03.2024 ம் தேதி கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி விரைந்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் இசக்கி மற்றும் காவலர்கள் கோட்டைக்காடு கரைப்பதூர் பகுதியில் பகுதியில் விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்த 1.புருயோட்டம் மஜ்ஹி(20), ஒடிஸா 2.மனோஜ் மஹாகுர்(31), ஒடிஸா 3. ஜித்தன்(22), ஒடிஸா ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 6 Kg கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர். பிறகு எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் சென்றனர்.
திருப்பூர் மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்