Mon. Jul 21st, 2025

No Helemet No Key விழிப்புணர்வு நிகழ்ச்சி

பத்திரிக்கை செய்தி

“No Helmet No Key” விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்திய திருப்பூர் மாவட்ட போக்குவரத்து போலீசார் மோட்டார் வாகனச் சட்டத்தின் படி இருசக்கர வாகன ஓட்டிகளும் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வருவதும், அவ்வாறு வருபவர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிப்பதும் வழக்கமானது. மேலும் விபத்துக்களின் போது அதிகமான உயிரிழப்புகள், தலைக்கவசமின்றி பயணித்து தலையில் அடிபடுவதால் ஏற்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கிலும், இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிவதை உறுதி செய்யும் நோக்கிலும், *புது முயற்சியாக* தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவதை வழக்கப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பள்ளி குழந்தைகள் மூலமாக அவர்களது பெற்றோர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக் குப்தா இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் அனைவரும் முதற்கட்டமாக இன்று 28.03.2024-ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பயிலும் சுமார் 1100 மாணவ மாணவிகளுக்கு இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், போக்குவரத்து விதிகளின் முக்கியத்துவம் குறித்தும், விழிப்புணர்வு காணொளி, "No Helmet No Key” என்பதன் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள், துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றை வழங்கியும் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாகவும் மாணவர்களின் மனதில் இதை பதியச்செய்தனர். இதனால் அந்த மாணவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் அவர்களின் வீட்டு நபர்கள் இருசக்கர வாகனம் எடுத்துச் செல்லும் போது தவறாமல் தலைக்கவசம் அணிந்து செல்வதை அவர்களிடம் வலியுறுத்தி, அவர்கள் பாதுகாப்பாக பயணிப்பதையும், விபத்தின்றி வீடு திரும்புவதையும் உறுதி செய்வார்கள். இதே போல திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இதை நடைமுறைப்படுத்தி மாணவர்கள் மூலமாகவும் பெற்றோர்களுக்கு தலைக்கவசம் அணிவதை வழக்கப்படுத்திட காவல்துறையினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *