
C.No.29/SB/Press Note/Tiruppur DT: 27.03.2024
பத்திரிக்கை செய்தி
தாராபுரம், குண்டடம் பகுதியில் பகவதி கிளினிக் என்ற பெயரில் சட்ட முரணாக அலோபதி மருத்துவம் பார்த்து வந்த சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு:
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் உட்கோட்டம், குண்டடம் அருகே உள்ள கெத்தல்ரேவ் பகுதியில் சில வருடங்களாக குருவாயூரப்பன்-57 த/பெ.ராஜீ, கொழிஞ்சிவாடி, தாராபுரம் என்பவர் தான் சித்த மருத்துவம் மட்டுமே பயின்றுள்ள போதும் சட்டத்திற்கு முரணாக “பகவதி கிளினிக்” என்ற பெயரில் அலோபதி மருந்துகளை வைத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ளவர்களுக்கு போலியாக தானே MBBS மருத்துவர் போன்று அலோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார், மேற்படி சித்த மருத்துவரான குருவாயூரப்பன் போலியாக அலோபதி கிளினிக் நடத்திவருவது குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து, மேற்படி கிளினிக்கை இன்று 27.03.2024 ஆம் தேதி மதியம் டாக்டர் உமாமகேஸ்வரி, Chief medical officer, Dharapuram Government Hospital மற்றும் திரு. உமா, Drug inspector, Coimbatore ஆகியோர் குண்டடம் போலீஸார் உதவியுடன் திடீரென ஆய்வு செய்த போது அங்கு மேற்படி சித்த மருத்துவர் போலியாக அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அங்கிருந்த அலோபதி மருத்துகளும், உபகரணங்களும் கைப்பற்றப்பட்டது. பிறகு இது குறித்து Chief medical officer, Dharapuram Government Hospital அவர்கள் அளித்த புகாரின் பேரில் Indian Medical Council Act – ல் வழக்கு பதிவு செய்த குண்டடம் போலீஸார் சாட்சிகளை விசாரித்து மேற்படி சித்தா மருத்துவரான குருவாயூரப்பனை கைது செய்து, பிறகு அவரை நீதிமன்ற உத்தரவுபடி நீதிமன்ற காவலுக்காக தாராபுரம் சிறைக்கு கொண்டு சென்றனர்.
தலைமை நிருபர் சரவணகுமார்