
தாராபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு:
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் உட்கோட்டம் – தாராபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக இன்று 25.03.2024 ம் தேதி காலையில் கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற தாராபுரம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் முத்துக்குமார், மற்றும் காவலர் ஆகியோர் தாராபுரம் ITI கார்னர் பகுதியில் கஞ்சாவை விற்பதற்காக வைத்திருந்த 1) பாண்டி முருகன்-65, த/பெ. காளிமுத்து, செட்டிபாளையம், கொடுவாய், திருப்பூர். 2) ஷாஹபஜ்-27, த/பெ நௌசத், உத்தரபிரதேசம். ஆகிய இரண்டு நபர்களை பிடித்து விசாரித்ததில், தேனியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக ஒப்புக்கொண்டதால் மேற்படி நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்த சுமார் 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றி, மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர், பிறகு எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலுக்காக கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
தலைமை நிருபர் சரவணகுமார்