
C.No.26/SB/Press Note/Tiruppur Dt: 23.03.2024
ஊத்துக்குளி பகுதியில் கஞ்சா சாக்லேட்டுகள் வைத்திருந்த நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைப்பு
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் உட்கோட்டம் – ஊத்துக்குளி பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக இன்று 23.03.2024 ம் தேதி காலையில் கிடைத்த ரகசிய தகவலையடுத்து, உடனே அப்பகுதிக்கு சென்ற தாராபுரம் மதுவிலக்கு போலீஸார் பல்லகவுண்டன்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பதற்காக வைத்திருந்த பத்மநாப ஜெனா(49), த/பெ. நாராயண் ஜெனா, கும்பக்கரை, பத்ராக், ஒடிசா. என்பவரை பிடித்து விசாரித்ததில்,அவர் தனது சொந்த ஊரான ஒடிசாவில் இருந்து வரும்போதே மறைமுகமாக கஞ்சா சாக்லேட்டுகளை கொண்டுவந்து தனக்கு தெரிந்தவர்களுக்கு விற்று வந்தது தெரியவந்ததால், அவரை கைது செய்து, அவரிடமிருந்த சுமார் 1 கிலோ 150 கிராம் எடையுள்ள கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர், இதற்காக அவர்மீது வழக்கு பதிவு செய்து, பிறகு எதிரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலுக்காக திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
சரவணகுமார் திருப்பூர்