
PRESS RELEASE
மோடிக்கு ஆதரவாக திரளும் திருநங்கைகள்!
தீவிர பிரச்சாரம் செய்ய திட்டம்!
திருச்சி பார்லிமெண்ட் தொகுதி இணை அமைப்பாளர்
டாக்டர் ஆர்ஜி ஆனந்த் முன்னிலையில் மீண்டும் மோடி வேண்டும் மோடி
என கோஷமிட்டு
திருநங்கைகள் வாக்குறுதி!!
—————
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு தரப்பு மக்களை
குழு குழுவாக சந்தித்துவரும் திருச்சி பார்லிமெண்ட் தொகுதி பாஜக இணை அமைப்பாளர் டாக்டர் ஆர்ஜி ஆனந்த் தமிழ்நாடு திருநங்கைகள் நல சங்க நிர்வாகிகளை இன்று புதுக்கோட்டையில் சந்தித்து மோடியின் பத்தாண்டு கால சாதனை விளக்க பிரசுரங்களையும் மோடி காலண்டர்களையும் வழங்கி ஆலோசனைகள் மேற்கொண்டார்.
அப்போது பேசிய தமிழ்நாடு திருநங்கைகள் நல சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிவானி
மூன்றாவது முறையும் மோடி பிரதமராக வரவேண்டும் என்பதற்காக
எதிர்வரும் ஏப்ரல் மாதம் கூத்தாண்டவர் கோயிலில் பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் கூடி
நடத்தும் சித்ரா பெளர்ணமி திருவிழாவில் மோடி பெயரில்
மகாயாகம் செய்யப்பட இருப்பதாகவும் தொடர்ந்து தமிழ்நாட்டின் எல்லா தொகுதிகளிலும் வீடுவாரியாக கடைவாரியாக சென்று மோடிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதுடன் தெருமுனை பிரச்சார கலை நிகழ்ச்சிகளையும்
நடத்த இருப்பதாக தெரிவித்தார்.
உடன் பாஜக மாவட்ட பொது செயலாளர் ஏவிசிசி கணேசன்,
உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் நகர தலைவர் லெட்சுமணன்,செயலாளர் ஆனந்த்,அடப்பன்வயல் கிளைத்தலைவர் கணேசன்யாதவ் மற்றும் பூத்கமிட்டி உறுப்பினர்கள் உடனிருந்தனர்.