🔥⛔ அவிநாசிபாளையம் காவல் நிலைய பகுதி – பொங்களூரில் இரவில் அடுத்தடுத்த🏠🏠 2 வீடுகளில் 🔓பூட்டை உடைத்து திருடிய நபர் கைது – சிறையில் அடைப்பு⛔🔥
திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம் காவல் நிலைய பகுதியான பொங்களூர் அம்மன் நகரில் கடந்த 23.05.24 ம் தேதி இரவில் 🏠🏠2 வீடுகளின் 🔓பூட்டை உடைத்து மொத்தம் 🪙சுமார் – 6 புவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் & 💷ரூ. 4,45, 000/-பணத்தையும் யாரோ திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து வழக்கு பதியப்பட்ட நிலையில்,திருப்பூர் மாவட்ட SP அவர்களின் உத்தரவுப்படி, பல்லடம் DSP அவர்களின் மேற்பார்வையில் 👨🏻✈️ SI விஜயகுமார்,ராஜா & PC பழனியாண்டவர், சரவணபிரபு ஆகியோர் அப்பகுதி CCTV 🎥 கேமரா பதிவுகளை ஆய்வு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டது கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்த நடராஜன் @ நட்டூறான்-(56) என்றும், இவரின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 40 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதையும் கண்டறிந்ததுடன், உடனடியாக அவரை கைது செய்து🔗🔗 திருடப்பட்ட 💶பணத்தையும் 🪙நகைகளையும் மீட்டு, பிறகு அவரை ⚖️ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.💥🔥💥
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்

